கனடா தேர்தலில் பாரத வம்சாவளியினர்

கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளன. காமன்ஸ் சபையில் பெரும்பான்மை பெற மேலும் 14 இடங்கள் தேவை. எனினும் தற்போதைய கூட்டணியே தொடரும் என்பதால் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் பாரத வம்சாவளியைச் சேர்ந்தவர்களான ஜக்மீத் சிங், ஹர்ஜித் சாஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சக்கர் உள்ளிட்ட 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.