பாரதத்தின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இந்தியாவில் உள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்கள் சட்டத்திற்கு எதிரானவர்களின் செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. அது ஊடக தர்மம் என்று நினைக்கிறார்களோ? இவர்களுக்கு இணையாகவே அமெரிக்கா, இங்கிலாந்து. முஸ்லிம் நாடுகளின் ஊடகங்களும் குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்து கொள்ளாமல், முஸ்லிம்களுக்கு எதிரானது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அமெரிக்க,இங்கிலாந்து ஊடகங்கள் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதற்கு பாகிஸ்தான் முக்கியமான காரணம். இச் சட்டம் நாடளுமன்றத்தில் நிறைவேறிய பின்னர், சுமார்5,000க்கு மேற்பட்ட சமூக ஊடகங்கள் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை பற்றிய பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன.
பாகிஸ்தான் ஜனாதிபதி ‘‘மோடியின் பாசிச ஹிந்துவ அரசாங்கம் முஸ்லிம்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது’’ என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியை வைத்துக் கொண்டு தான் அந்நிய ஊடகங்கள் பொய்ச் செய்தியை பரப்புகின்றன. இந்த செய்தி பொய்யானது என இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னரும்,இந்திய ஊடகங்களும், அன்னிய ஊடகங்களும் அரசின் செய்தியை வெளியிடவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தம், (CAA) தெளிவாக குறிப்பிட்டுள்ளது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மையினரானஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து அகதிகளாக வெளியேறி இந்தியாவில் தஞ்சம்பு குந்துள்ளார்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது சம்பந்தமான சட்ட திருத்தம் இது. ஏற்கனவே இந்திய திருநாட்டில் குடியிருந்தவர்களுக்கு (எந்த மதமானாலும்) வெளியேற்றப்பட மாட்டார்கள் என தெள்ளத் தெளிவாகதெரிவித்த பின்னரும், இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என விமர்சனம் செய்வது அப்பட்டமான பொய் பிரச்சாரம்.
உலகஊடகங்கள்: தி நியூயார்க் டைம்ஸ்: இந்திய அரசு சர்ச்சைக்குரிய பிரிவினையை ஏற்படுத்தும் சட்டத்தையக் கொண்டு வந்துள்ளது. , மக்கள் மத ரீதியாக பிளவு படுத்தப்படுவார்கள் என எழுதியது
*வாஷிங்டன்போஸ்ட்: ‘‘இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய மசோதாவை இந்தியா நிறைவேற்றியுள்ளது. மத ரீதியாக குடியுரிமை வழங்க வகை செய்யும் வகையில் முதல் முறையாக மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மதசார்பின்மை கொண்டு வளரந்து வந்த நாடு தற்போது ஹிந்து நாடாக மாறியுள்ளது ’’ என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மத மாற்றத்திற்கு வித்திட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்பதை மறந்து விட்டு கட்டுரை எழுதியுள்ளது.
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி கார்டியன் இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடக்கும் வன்முறை போராட்டங்களை ஆதரித்து கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். ஆனால்1981 -ல் இங்கிலாந்தில் பெற்று வந்த தானாக குடியுரிமனை பெறும் முறை ரத்து செய்யப்படும், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என இங்கிலாந்து ராணி பேசியதை மறந்து விட்டு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.
அல் ஜஸீரா : ‘‘இந்தியாவில் 44 வருட பாரம்பரியம் இதனால் மாற்றப்படுகிறது. இதனால் முஸ்லிம்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது. மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய ரோஹிங்கிய முஸ்லிம் பக்கத்து நாடான பங்களாதேஷ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என துடிக்கும் பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரான், ஈராக், சிரியா சவுதி அரேபியா போன்ற நாடுகள் கூட ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவதற்கு இவர்களுக்கு எவ்வித தகுதியும் கிடையாது.
வக்கிர புத்தியுடன் தி போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ‘‘இந்த மசோதா மூலம் ஹிந்து மதம் உள்ளிட்ட 6 மாதங்களைச் சார்ந்த அகதிகள் குடியுரிமை பெறுவார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லிம்கள் நாட்டை இழப்பார்கள்’’ என விஷமத்தனமாக செய்தியை வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தி அந்நிய ஊடகங்களில் வரும் செய்தியை காட்டியே பிரச்சாரம் செய்கிறார்.
ஆப்கானிஸ்தானில் ஹிந்துகள் சீக்கியர்களும் மத ரீதியாக துன்பத்திற்குள்ளாகிறார்கள் என இந்தியா கூறியதை, ஆப்கானிஸ்தான் முன்னால் அதிபர் ஹமீத் கர்சாய், ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என யாருமே இல்லை. ஆப்கானிஸ்தான் நாடே நீண்ட காலமாகப் போரலும் உள்நாட்டு மோதல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார். ஆனால் இவரது பேட்டியில், ஆப்கான் நாட்டில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் என்னை சந்தித்தார், தாலிபான்களின் கையில் நம்மை (முஸ்லிம்கள்) விட, ஹிந்துக்களும் சீக்கியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். என குறிப்பிட்டுள்ளதை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆப்கான் அகதிகள் 18,000 பேர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களும் மற்றும் சீக்கியர்களுமே இது உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல் இன்றல்ல 2011ல் காங்கிரஸ் தர்பாரில் !
அந்நிய ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிடுவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அன்னிய ஊடகங்கள், இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்காதவை. பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என குரல் கொடுக்காதவை ஊடகங்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை வைத்துக் கொண்டுதான், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,மம்தா போன்றவர்கள் கூச்சலிடுகிறார்கள். அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய ஊடகங்கள் இந்தியாவின் மீது பாய முக்கியமான காரணம், அந்த நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம், இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்ற முயன்றதும், அந்த தொண்டு நிறுவனங்களை பாரதம் தடை செய்ததும்தான் !