ஹிந்து எழுச்சியே உலக மலர்ச்சி – காந்திஜி

பிரபல உருது கவிஞன் முகமது இக்பால் தொடக்க காலத்தில் தேசியவாதியாகத் தலையெடுத்தபோது 1904 ல் புனைந்த ‘சாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா’’ (பாருக்குள்ளே நல்ல நாடான ஹிந்துஸ்தான் நமது நாடு) என்று தொடங்கும் பிரசித்தி பெற்ற பாடல், ”ஹிந்து ஹை ஹம் வதன் ஹை ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற கோஷத்துடன் முடிவடைகிறது. (அதாவது, ஹிந்துஸ்தானில் வாழும் நாம் அனைவருமே ஹிந்து என்று பொதுப்படையாகக் கூறலாம் என்பதே அந்த கோஷம்) ஆனால் பின்னர், அவர் மேல் படிப்புக்காக கேம்பிரிட்ஜ் சென்று திரும்பி வந்த பிறகு, தீவிர முஸ்லிம் மதவாதியாக உருமாறினார் என்பது வேறு விஷயம். இந்தியாவை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாம் உருவாக்கப்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வரலானார்.

ஹிந்துக்களும் இந்திய முஸ்லிம்களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத தனித்தனி தேசிய இனத்தினர் என்ற வாதத்தை முன்வைத்தார். ஹிந்துக் களும் இந்திய முஸ்லிம் களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத தனித்
தனி தேசிய இனத்தினர் என்ற வாதத்தை முன் வைத்தார். தனது தேசியப் பாடலின் இறுதி கோஷத்தை ‘‘நாம் அனைவருமே முஸ்லிம்கள் (முஸ்லிம் ஹை ஹம் வதன் கே) என்று மாற்றியமைத்து 1934ல் அறிக்கை வெளியிட்டார். அன்றையிலிருந்து தேசியவாதிகள் ‘‘சாரே ஜஹான் ஸே அச்சா’’ பாடலை அறவே புறக்கணித்துவிட்டனர்.

‘‘எனது தேசத்தைக் காட்டிலும் நான் என் மதத்தையே மிகவும் நேசிக்கிறேன். ஆகவே நான் முதலாவதாக ஒரு ஹிந்து; அதன் பின்னரே தேசியவாதி’’ என்று மகாத்மா காந்தி திட்டவட்டமாக, 1922 பிப்ரவரி 23 தேதியிட்ட ‘‘யங் இந்தியா’’ வார இதலில் எழுதினார்.

மேலும், ‘‘நான் இவ்வாறு கூறுவதன் தாத்பர்யம் யாதெனில், எனது நாட்டின் நலன்களும் என் மதத்தின் நலன்களும் ஒன்றேயாம், வெவ்வேறு அல்ல என்பதே ஆகும்’’ என்று விளக்கம் அளித்தார்.

‘‘அகிம்சை, பிற மதங்களிடம் சகிப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஹிந்துயிஸமே, உலகத்திலேயே பெரும் சிறப்பு வாய்ந்த ஒரே மதம்’’ என்று சர்வதேசக் கூட்டமைப்புக் கழக உறுப்பினர் சிலர் காந்திஜியை அவரது சபர்மதி ஆசிரமத்தில் 1926 ஜனவரியில் சந்தித்தபோது கூறினார். (‘யங் இந்தியா’’, 19.1.1928).  ‘‘நான் ஒரு ஹிந்து. ஹிந்துயிஸத்தை உலக நாடுகள் அனைத்துமே ஸ்வீகரித்தால், மனித குலம் ஏனைய உலகாயத இடர்பாடுகளினின்றும் விடுபடும் என்று காந்திஜி ஐயந்திரிபற விளம்பியுள்ளார்.

(‘யங் இந்தியா’’, 22.2.1922)‘‘ஹிந்துயிஸம் என்றால் என்ன?’’ என்ற தலைப்பில் அண்ணல் காந்தி 84 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கட்டுரையில், வையகமே வியக்குமளவு ஹிந்துமதம் ஜகஜ் ஜோதியாக குபீெரன்று விகசித்து இதுகாறும் கண்டிராத அளவுக்கு மறுமலர்ச்சி பெறும். (யங் இந்தியா 24.24.1924) என்று தமது தீர்க்க தரிசனத்தை
பதித்துள்ளார்.