திரை விலகுகிறது கோரமுகம் தெரிகிறது https://youtu.be/AGu3U7PSl0U

மிகுந்த ஆர்ப்பாட்டங்களுடனும், எதிர்பார்ப்புடனும் வெளிவருகின்ற சில பிரபலங்களின் திரைப்படங்கள் வசூலில் கோடிகளை குவிக்கின்றன. படம் வெளியான ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல் என்று செய்திகள் வெளியாகின்றன. இது மற்றைய கதாநாயகர்களின் சாதனையை முறியடித்தது என்று தம்பட்டம் வேறு அடித்துக் கொள்கின்றனர். பிரபல நடிகர்கள் படத்திற்கான சம்பளம் கோடிக்கணக்கில் வாங்குகிறார்கள். நடிகர்கள் தாங்கள் வாங்கிய உண்மையான சம்பளத்திற்கோ, படம் எடுத்தவர்கள் சம்பாதித்த பணத்திற்கோ வருமானவரி கட்டுவதில்லை. இதில் எந்த நடிகரும் விதிவிலக்கு இல்லை.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த, விஜய் நடித்த பிகில் படம் வசூலில் 300 கோடியைத் தாண்டியது என்று செய்திகள் வெளியாகியது. அந்தப் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதற்கான உண்மையான கணக்குகளை செலுத்தாததால் வருமானவரி சோதனை நடைபெற்றது. அன்பு செழியன் வீட்டில் கணக்கில் வராத பணம் ரூ.77 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் இதுவே விவாதப் பொருளாகியது. கலந்துகொண்ட பாஜக எதிர்ப்பு பிரமுகர்கள் இது விஜய் மீது பழிவாங்கும் நடவடிக்கை என்றனர். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் ரஜினிகாந்த் மீது அரசு பரிவு காட்டுகிறது என்றனர். எப்போதும் போல, விவாதம் நடத்தும் நெறியாளர்களும் தங்களது பாஜக எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

சினிமாவில் கதாநாயகர்களாக நேர்மையின் வடிவமாக வலம் வருகிறவர்களின் மற்றொரு பக்கம் விகாரமான. அப்பாவி ரசிகர்கள் இது புரியாமல் அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள்.

விஜய்யோ ரஜினியோ கமலோ யாராக இருந்தாலும் சம்பாதிக்கிற பணத்திற்கு வரி கட்டுவதுதான் நியாயமானது.