கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கன அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு காய்ச்சல் முகாம்களுக்கு வந்து சோதனை மேற்கொள்ளுங்கள். லேசான அறிகுறி உள்ளவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மாநகராட்சி வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். குறைவான அறிகுறி உள்ளவர்களும் மருத்துவமனை வருவதால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது’ என தெரிவித்தார்.