எரிக்கப்பட்ட நூலகம்

கர்நாடக மாநிலம், மைசூருவில் தினசரி கூலித் தொழிலாளியான சையத் ஐசக் என்பவர் தான் படிக்கவில்லை என்பதால், தான் படும் துயரங்களை மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஒரு நூலகம் துவக்கினார். அந்த நூலகத்தில் பகவத் கீதை மட்டுமே சுமார் 3000 பிரதிகள் இருந்தன மேலும், குர்ஆன், பைபிள் புத்தகங்கல் 1,000 பிரதிகள், நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என சுமார் 11,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அந்த நூலகம் சில மர்ம நபர்களால் இரவோடு இரவாக தீக்கிரையாக்கப்பட்டது. இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.