பாரதத்திடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் தொடக்கம் மட்டுமே என பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் அன்டோனியோ மொரால்ஸ் கூறியுள்ளார். 375 மில்லியன் டாலர்கள் செலவில் பாரதத்திடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கும் திட்டத்தை அந்நாட்டு மக்கள் மற்றும் ராணுவம் வரவேற்பதாக கூறியுள்ள அவர், மேலும் பாரதத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அதன் மூலம் மேலதிக தளவாடங்கள் பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.