புத்தகம் வெளியீடு

நமது பெருமைமிகு பாரதம் வீரப் பரம்பரைக்கு சொந்தமானது. கொடியவர்களை அழிக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் முதல் சத்ரபதி சிவாஜி வரை அனைவரும் சிறுவயதில் விளையாட்டின் மூலமாகவே வீரம், போராடும் தன்மை உள்ளிட்ட பலவற்றை கற்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளையாட்டின் மூலமாகவே பலவற்றையும் நமக்கு உணர்த்தியுள்ளார். சுவாமி விவேகானந்தரும் உடலையும், உள்ளத்தையும் உறுதி செய்யுங்கள் என கூறியுள்ளார். ஆனால் இன்றோ மனிதர்கள் ஆனந்தம் பெற வேண்டும் என்பதற்காக பல வழிகளில் நேரத்தையும், பணத்தையும் தேவையின்றி செலவிடுகின்றனர். ஆனந்தத்தை அடைய எளிய வழி விளையாட்டு ஆகும். ஆனந்தம் தரும் அதே நேரத்தில், நமக்கு தேசபக்தி, ஒற்றுமை, விழிப்புணர்வு நிறைந்த சுழலை உருவாக்க விளையாட்டு உதவுகிறது. இப்படிப்பட்ட சூழலை உருவாக்க ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் 133வது பிறந்த நாள் விழா மற்றும் யுகாதி விழா ஆகியவை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  அந்த விழாவின் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.எஸ் மாநில உடற்பயிற்சி  பொறுப்பாளர் பாலாஜி எழுதிய ‘பண்புகளை வளர்க்கும் விளையாட்டுக்கள் கற்போம் கற்பிப்போம்’ என்ற புத்தகம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு முக்கியஸ்தர்களால் வெளியிடப்பட்டது. விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ. 150/-