பயங்கரவாதிக்கு தண்டனை

பர்த்வான், கயா, மேற்கு வங்காளத்தின் பர்வான் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான கௌஸர்,  ஜம்மத் – உல்- – முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன். இவனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக, இவ்வழக்கில் 33 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், கௌசருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.