குருத்வாராவில் குண்டு வெடிப்பு

ஆப்கனிஸ்தானின் காபூலில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது. கடந்த மாதம் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அங்குள்ள அனைத்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், ஆப்கன் பாதுகாப்பாக உள்ளது, இங்கிருந்து சென்ற ஹிந்துக்களும் சீக்கியர்களும் நாடு திரும்ப வேண்டும் என ஆப்கனை ஆளும் தலிபான்கள் கூறியுள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றுவதற்கு முன் அங்கு சுமார் 600 சீக்கியர்கள் மட்டுமே இருந்தனர். அது தற்போது வெகுவாக குறைந்துள்ளது.