உள்ளாட்சியில் பா.ஜ.க வெற்றி

குஜராத் மாநிலத்தின் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ல்  நடைபெற்றது. அதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி, பஞ்சாயத்து, தாலுகா என அனைத்தையும் தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இது மக்கள் பா.ஜ.க மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபளிப்பதாக உள்ளது.