பாரதத்தின் வலிமை அமைதிக்கானது

மத்திய பிரதேசத்தின் மத்திய பிரதேசத்தின் மகாகௌஷல் பகுதிக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ஜபல்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “வருங்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடாக பாரதம் உருவாகும் என நாம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகமும் கூறி வருகிறது. பாரதம் விஸ்வ குருவாக உருவாக இருக்கிறது. அந்த இலக்கை நாம் அடைய வேண்டும். நாம் யாரையும் வெற்றி கொள்ளவோ அல்லது எவரையும் மாற்றவோ போவதில்லை. நாம் நேர்மையுடன் இருக்க வேண்டும். நமது ரிஷிகள், முனிவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும். நம்முடைய சக்தி மற்றவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குவதற்கோ, வலி ஏற்படுத்துவதற்கோ அல்ல. மாறாக, அது அமைதியை உருவாக்கவும், பலவீனமானவர்களை பாதுகாப்பதற்காகவும் இருக்கும். பல உலக நாடுகள் தங்களை உயர்ந்தவர்கள் என நிலைநிறுத்தி கொள்ள போரில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நாம் போரில் காயம் அடைந்தவர்களின் காயங்களுக்கு மருந்து பூசினோம். நம்முடைய ரிஷிகள் உண்மையில் சமூகத்திற்கு அதிகம் சேவையாற்றி உள்ளனர். சனாதன தர்மம் என்பதே ஹிந்து ராஷ்டிரம் மற்றும் ஹிந்து பாரம்பரியம் தான். அதனால், வரும் நாட்களில் பாரதம் உலக வல்லரசாக மாற வேண்டும். அந்த நிலையை அது இணக்கத்துடன் அடைய வேண்டும். ஆனால், அதற்குரிய பலம் இன்றி அது சாத்தியம் இல்லை, அதற்கு மதிப்பும் இருக்காது. நாம் அனைவரும் தர்மத்தின் வழியைப் பின்பற்றுவோம், அப்போதுதான் அது சாத்தியமாகும்” என கூறியுள்ளார்.