அமைதிக்கு பாரதம் உதவும்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தொலைபேசியில் பேசிய பாரதப் பிரதமர் மோடி, உக்ரைனில் அமைதிக்காக எந்த வகையிலும் பங்களிக்க பாரதம் தயாராக உள்ளது என்று உறுதிமொழியை அளித்தார். உக்ரைனில் நடந்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் மோடியிடம் விளக்கினார். தற்போதைய மோதலால் ஏற்பட்ட உயிர், உடைமைகள் இழப்பு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். போரை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் இரு நாட்டுத் தலைவர்களிடமும் வலியுறுத்தினார். மேலும், அங்குள்ள பாரத குடிமக்களின் பாதுகாப்பில் பாரதத்தின் ஆழ்ந்த அக்கறையை தெரிவித்த பிரதமர் அவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கு உக்ரைன் அதிகாரிகளின் உதவியை கோரினார். பிரதமர் மோடி ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசி, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், உக்ரேனிய வெளியுறவு அமைச்சருடன் இது குறித்து பேசியுள்ளார்.