டோக்கியோ ஒலிம்பிக் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2020 வரும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5, 2021வரை டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் 22 வெவ்வேறு பிரிவுகளில் 539 போட்டிகள் 21 இடங்களில் நடத்தப்படும். இதில், பாரத்த்தின் சார்பில், ஒன்பது விளையாட்டு பிரிவுகளில் போட்டியிட 54 பாரா விளையாட்டு வீரர்களுடன் பாரதம் மிகப்பெரிய அணியை அனுப்புகிறது. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இக்குழுவின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘இதற்காக ‘கர் தே து கமல்’ என்ற அதிகாரப்பூர்வ தீம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை பாராலிம்பிக்கில் குறைந்தபட்சம் 4 பதக்கங்களை நாங்கள் வெல்வோம்’ என பாராலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா (பி.சி.ஐ) தலைவர் தீபா மாலிக் தெரிவித்துள்ளார்.