2050ல் பாரதம்

இந்தியன் எக்னாமிக் 2022 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அதானி குழுமத் தலைவரான கௌதம் அதானி, ‘தற்போது பாரதப் பொருளாதாரம் 3 டிரில்லியன் டாலராக உள்ளது. இது, 2050ம் ஆண்டுக்குள் சுமார் 30 டிரில்லியன் டாலராக உயரும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் 2050ம் ஆண்டுக்குள் பாரதப் பங்குச் சந்தைகள் மூலதனத்தில் 40 டிரில்லியன் டாலர்களை சேர்க்கும். வறுமையை முழுமையாக ஒழித்துவிடும். பாரதத்தில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 100 பில்லியன் டாலர்களை எட்டும். இதன் மூலம் பாரதம் உலகின் மூன்றாவது பெரிய அன்னிய நேரடி முதலீட்டை பெறும் நாடாக மாறும். பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கு, மக்கள்தொகையின் டிவிடென்ட், நடுத்தர மக்களின் வளர்ச்சி, துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி வாய்ப்பை கொண்ட பொருளாதாரம் என்ற நான்கு முக்கிய அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பாரதம் போலத் தனித்துவமாக உலகில் எந்த நாடும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.