பாரதமும் போரிஸ் ஜான்சனும்

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன், பாரதத்தின் குடியரசு தின விழாவுக்கு வருகை தர இருந்தார். அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதால் கடைசி நேரத்தில் அப்பயணம் தள்ளிவைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 26 முதல் நான்கு நாட்கள் பாரதத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் அவர் வருகைத் திட்டம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாரதத்தில் பரவும் கொரோனாவால் இத்திட்டம் ஏப்ரல் 26 அன்று, ஒரு நாள் பயணமாக மாற்றியமைக்கப்பட்டது.

இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ்கள் உருவாவதால் மக்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று அரசு சொல்கிறது. ஆனால், இங்கிலாந்து பிரதமரால் பாரத அரசுடன் ஜூம் போன்ற இணைய செயலிகள் மூலம் ஏன் சந்திப்பை நடத்த முடியவில்லை.” என அவர் கேட்டுள்ளார். தொழிலாளர் கட்சியினரின் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன?

இங்கிலாந்தில் வாழும் மிகப்பெரிய இன சிறுபான்மையினர் பாரத வம்சாவளியினர். சுமார் 1.5 மில்லியனாக இருக்கும் இவர்கள் தேர்தல் காலங்களில் பெரும்பாலும் தொழிலாளர் கட்சியையே ஆதரித்து வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், பாரத வம்சாவளியினர் 24 சதவீதம் பேர் மட்டுமே தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது 46 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலக அளவில் அதிகரித்து வருவது, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பாரத அரசுக்கு ஆதரவாக உள்ளது, காஷ்மிர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியின் பாரதத்திற்கு எதிரான நிலைப்பாடு, பாகிஸ்தான் உட்பட பல முஸ்லிம்கள் இங்கிலாந்தின் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளனர் என தெரிந்திருந்தும் அவர்களுக்கு ஆதரவான தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடு, பிரெக்ஸிட் உட்பட பல முக்கிய பிரச்சனைகளில் அக்கட்சியினரின் போக்கு போன்றவற்றுடன் தங்களது கடுமையான உழைப்பு, திறமையால் தற்போது இங்கிலாந்தில் பாரத வம்சாவளியினர் அரசியல், வியாபாரம் தொழில் என பலத் துறைகளில் முடிவெடுக்கும் முக்கிய இடங்களில் உள்ளனர். போன்றவையே அங்கு வாழும் பரத வம்சாவளியினரின் மன மாற்றத்திற்குக் காரணம். எனவேதான், இங்கிலாந்தின் எதிர்கட்சிகள் தற்போது பாரதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றன.