பஜ்ரங் தள் போராட்டம்

தெலுங்கானாவை ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, அசாசுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், அங்கு பசுவதை மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தவில்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆதரவுடன், கால்நடை மாஃபியாக்கள் தெலுங்கானாவில் சட்டத்திற்கு பயப்படாமல் செயல்படுகின்றனர் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, தெலுங்கானாவில் பசுவதை மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும், கால்நடை மற்றும் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பஜ்ரங் தள் அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினர். மேலும், பசு கடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக பஜ்ரங் தள் உறுப்பினர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.