பஜ்ரங் தள் சௌர்ய பேரணி

கேரளாவில் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பு, ஆலப்புழாவில் பிரமாண்டமான ‘சௌரிய பேரணி’யை நடத்தியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான பஜ்ரங் தளத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வி.ஹெச்.பி தலைவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் முஸ்லிம் தீவிரவாதிகளுடன் போலீசார் கைகோர்த்து செயல்படுவதாகவும், இவற்றை என்றும் தேசியவாத சக்திகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்க்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக, கேரள மாநில காவல்துறை, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பஜ்ரங் தள் பேரணிக்கு அனுமதி மறுத்தது. ஆனால், முஸ்லிம் தீவிரவாத அமைப்பான பாப்புலர் பிப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் பேரணியை நடத்த அனுமதி அளித்தது. இருப்பினும், பல்வேறு தேசியவாத அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்த காவல்துறை பிறகு பஜ்ரங்தள் பேரணிக்கு அனுமதி அளித்தது. கேரள கம்யூனிச அரசு, அதே நாளில் நடைபெறவிருந்த பி.எப்.ஐ, எஸ்டி.பி.ஐ பேரணிக்கு வசதியாக, அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனப் போக்குவரத்தையும் அப்பகுதியில் கட்டுப்படுத்தியுள்ளது. இதுபோன்ற எந்த ஒரு பி.எப்.ஐ பேரணியும் பாதுகாப்பு தோல்விக்கும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று உளவுத்துறை ஏ.டி.ஜி.பி கேரள அரசுக்கு தெரிவித்த பின்னரும் இந்த அதிர்ச்சிகரமான முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பினர் கடந்த 6 மாதங்களில் கேரளாவில் இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களையும் ஒரு பா.ஜ.க பொறுப்பாளரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். கேரள உயர் நீதிமன்றம், சமீபத்தில் பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகியவை தீவிர வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் என்று கூறியது நினைவிருக்கலாம்.

(செய்தி ஆதாரம்: https://organiser.org/2022/05/21/82032/bharat/bajrang-dal-holds-massive-shourya-rally-in-kerala-sends-stern-warning-to-islamist-terrorists/)