வங்கதேச வன்முறை பின்னணி

அரசு பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹெபிசத் – இ – இஸ்லாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு வன்முறை கலவரங்களை நிகழ்த்தியுள்லனர். கோயில்கள் எரிப்பு, ஹிந்துக்கள் மீது வன்முறை, ரயில் எரிப்பு, சாலைகள் தடுப்பு, ஊடகங்கள் மீது தாக்குதல் என நிகழ்ந்துள்ளது. காவல்துறையும் தடியடி, துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இந்நிலையில், ‘மேற்கு வங்கத்தில் உள்ள ரோஹங்கியா முஸ்லிம்களால் தங்கள் நாட்டில் வன்முறை கலவரங்கள் நிகழ்வதாகவும் அவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்ப ஐ.நா சபையில் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா கோரிக்கை பாரதப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.