ஆயுத படையினருக்கு ஆயுஷ்மான் அட்டைகள்

மத்திய ஆயுத படைப்பிரிவுகளைச் சேர்ந்த தலா 10 பேருக்கு, ஆயுஷ்மான் அட்டைகளை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந் ராய் டெல்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஆயுத படைகளின் தலைமை இயக்குனர்களும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை கடந்த 2018ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம், மத்திய ஆயுத படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கடந்தாண்டு ஜனவரியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 பிறந்த தினத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மத்திய ஆயுத படையினர், அவர்களது குடும்பத்தினர் என 35 லட்சம் பேர், இலவச சிகிச்சை பெற ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.