ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ இந்தியர்

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழகம், ஊட்டி அருகில் உள்ள கோத்தகிரியைச் சேர்ந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான டாக்டர். ஜெகதீஷ் கிருஷ்ணன், சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரிவர்டன் தொகுதியில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தன் மருத்துவ பணியுடன் இணைந்து ஆஸ்திரேலிய மக்களுக்கும் சேவை செய்வேன் என இவர் கூறியுள்ளார்.