பிரதமர் மோடி, பாரத சுதந்திரத்தின் 75வது வருட கொண்டாட்டத்தையொட்டி நமது விளையாட்டு வீரர்கள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளி மாணவ மாணவிகளுடன் உரையாடி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையொட்டி, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வரும் டிசம்பர் 4ம் தேதி குஜராத் அகமதாபாத்தில் உள்ள சன்ஸ்கர்தம் பள்ளியில் 75 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். அப்போது, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களை குறித்து அவர்களுடன் பேசுவார். நீரஜைத் தொடர்ந்து, தருண்தீப் ராய் (வில்வித்தை), சர்தக் பாம்ப்ரி (தடகளம்), சுசீலா தேவி (ஜூடோ), கே.சி. கணபதி மற்றும் வருண் தக்கர் (படகு போட்டி), பாராலிம்பியன்களில், அவனிலெகாரா (பாரா ஷூட்டிங்), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்) மற்றும் தேவேந்திர ஜஜாரியா (பாரா தடகளம்) ஆகியோரும் நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு செல்கின்றனர்.