தானோட்டி தெருக்கூட்டி

பின்லாந்தைச் சேர்ந்த, ‘ட்ரோம்பியா டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான ‘ட்ரோம்பியா பிரீ’ என்ற தானோட்டி தெருக்கூட்டும் இயந்திரம், இரவு நேரத்தில், ஹெல்சிங்கி நகர பாதைகளில் சுத்தம் செய்யும் பணியைத் துவங்கியுள்ளன. ஓராண்டு கடும் சோதனைகளுக்குப் பிறகு இவை தெருக்களில் களம் இறக்கப்பட்டுள்ளன. எந்த பருவநிலையிலும் குப்பையை அகற்றும் வகையில் ‘ட்ரோம்பியா பிரீ’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு பெரிய அளவுள்ள, ‘வாக்கும் கிளீனர்’ போல தோற்றம் அளிக்கிறது. நான்கு சக்கரங்களுடன் பயணிக்கும் இந்த ட்ரோம்பியா பிரீயில், மற்ற நவீன தானோட்டிகளில் உள்ளதைப் போலவே, கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் போன்ற அமைப்புகள் உள்ளன. இன்னும் இரண்டு இவை வர்த்தக ரீதியில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.