முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும், பல ராணுவ அதிகாரிகளும் இதில் இறந்துவிட்டனர். கடும் பனிமூட்டமான கால நிலைதான் இதற்கு காரணம் கூறப்பட்டாலும் இதில் வெளிநாட்டு சதி, பயங்கரவாதிகளின் சதி உள்ளிட்ட கோணங்களையும் மறுப்பதற்கில்லை. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த வருத்தமான செய்தியை பல முஸ்லிம் அடிப்படைவாதிகள் முகநூல்களில் கொண்டாடியுள்ளனர். இது இவர்களின் எண்ணம் என்ன, எதை நோக்கி இவர்கள் பயணிக்கின்றனர், தேசமும் தேசத் தலைவர்களும் பொதுமக்களும் விழுப்புடன் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை வெளிப்படுத்துகிறது.
இவர்கள் பயணித்த எம்.ஐ – 17V5 ஹெலிகாப்டர் ஒரு ரஷ்யா தயாரிப்பு. நமது விமானப் படையிடம் இவ்வகை ஹெலிகாப்டர்கள் தற்போது சுமார் 200 பயன்பாட்டில் உள்ளன. இதில் 39 பேர் வரை பயணிக்கலாம். இரண்டு என்ஜின்கள், 3 பைலட்டுகள் உண்டு. நாட்டின் மிக முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் பயன்படுத்துவது இதைத்தான். இவைகளை இயக்கும் முன்பாக அனைத்து பொறியாளர்களும் அனைத்தையும் அதற்கென உள்ள ப்ரோடோகால்படி 3 முறை சோதனை செய்வார்கள். எனவே, தொழிநுட்ப கோளாறுகள் வர வாய்ப்புகள் மிக அரிது. தாக்குதல் வந்தால் திருப்பித் தாக்க தேவையான ஆயுதங்களும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும்.
இவ்வகை ஹெலிகாப்டர்கள் உத்ராகண்ட் வெள்ளம், இமயமலை பனி சரிவு போன்ற பேரிடர் சமயங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் இயங்கும் இவ்வகை ஹெலிகாப்டருக்கு குன்னூர் தட்பவெப்பம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவ்வளவு இருந்தும் ஏற்பட்டுள்ள இந்த கோரவிபத்து, மக்கள் மனங்களில் நெருடலை ஏற்படுத்தியுள்ளதை தவிர்க்க முடியவில்லை.