மனோஜ் என்கிற மனுசுதன், கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவில் உள்ள கேரள மாநில போக்குவரத்து நிறுவனத்தில் பேருந்து நடத்துனராக இருப்பவர். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் தனது 11, 12 வயதுடைய குழந்தைகளுக்கு துணி எடுக்க தொடுபுழாவுக்கு பேருந்தில் சென்றார். வழியில் வண்ணாபுரம் என்ற இடத்தில், இரண்டு பேர் மனுசுதனை பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னார்கள். அவர்கள் ஆடை அணிந்திருந்த விதம் மனுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் இறங்க மறுத்தார். பேருந்து மங்காட்டுக்காவளை பகுதியில் உள்ள முகல் ஹோட்டல் பகுதியை அடைந்ததும் அங்கு காத்திருந்த சுமார் 150 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை பேருந்தில் நுழைந்து கடுமையாக தாக்கினர். தடுக்க முயன்றவர்களும் தாக்கப்பட்டனர்.
இறுதியில், உன் குழந்தைகளுடன் வந்ததால் நீ தப்பித்தாய், அடுத்தமுறை தப்பிக்க முடியாது என மிரட்டிச் சென்றனர். நூலிழையில் மரணத்தில் இருந்து தப்பித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறை அவரிடம் வாக்குமூலம் வாங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, அவர் சார்ந்திருந்த கம்யூனிச தொழிற் சங்கமும் குரல் கொடுக்கவில்லை. கேரளாவின் ஜனம் டிவியைத் தவிர, வேறு எந்த ஊடகங்களும் இச்செய்தியை ஒளிபரப்பவில்லை.
இந்த கொடூர நடவடிக்கைக்கு காரணம் பாரதத்தில் முஸ்லிம் தேசத்தை உருவாக்குவது குறித்து ஒரு சமூக ஊடக பதிவிற்கு பதிலளித்த மனு, பிரதமர் மோடியின் மன உறுதி இல்லாமல் இருந்திருந்தால், முஸ்லிம்கள் தங்கள் கனவை இந்நேரம் அடைந்திருப்பார்கள் என்பதும், முஸ்லிம்களுக்குப் பிடிக்காத குர்ஆன் வசனங்களின் மலையாள மொழிபெயர்ப்புகளை அவர் பதிவிட்டதும்தான். இதனை மத நிந்தனையாக திரித்துக்கூறி இந்த பயங்கரவாத சம்பவத்தை பி.எப்.ஐ பயங்கரவாத அமைப்பினர் அரங்கேற்றி உள்ளனர்.