ஹிந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது லண்டன் நகரின் லெய்செஸ்டரில் வசிக்கும் பாரத வம்சாவளியினர், ஹிந்துக்கள் மீது அங்குள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாரத தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது. இது சம்பந்தமாக பாகிஸ்தானியர்கள் பலரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து லெய்செஸ்டரில் வசிக்கும் பாரத பாகிஸ்தானிய சமூக தலைவர்கள்கூடி பேசி பயங்கரவாதத்திற்கு ஆதரவு கிடையாது என அறிக்கை வெளியிட்டனர். ஆனால், அதே நாளில், லெய்செஸ்டரை தொடர்ந்து, லண்டனின் பிர்மிங்ஹாம் நகரிலும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்மெக்மிக் பகுதியிலுள்ள துர்கா பவன் சென்டர் என்கிற ஹிந்து கோயிலுக்கு முன்பு, முகமூடி அணிந்த 200 முஸ்லீம்கள் ஒன்று திரண்டு ‘அல்லாஹூ அக்பர்’ என்று கோஷமிட்டபடியே, கோயில் மீது கற்கள், பாட்டில்களை வீசினர். இதனால் பயந்துபோன ஹிந்துக்கள், கோயிலை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், முஸ்லீம்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகவும், ஹிந்துக்கள் மைனாரிட்டியாகவும் இருக்கும் இடங்களில் எல்லாம், முஸ்லிம்களால் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதாக இங்கிலாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.