வருடாந்திர அறிக்கை சமர்பிப்பு

அகில பாரத பிரதிநிதி சபாவில் துறைவாரியான வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொது செயலாளர் தத்தார்ரேய ஹொஸபளே ஆகியோரின் சுற்றுப் பயணங்கள், நடைபெற்ற பயிற்சி முகாம்கள், தேசம் முழுவதும் நடைபெற்ற சேவைப் பணிகள், கிராமப்புற சேவைப் பணிகள், கொரோனா சேவைப் பணிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகள், கோசேவை பணிகள், குடும்பப் பிரபோதன், தர்ம ஜாக்ரன், சாமாஜிக் சமரசதா போன்ற துறைகளில் செய்யப்பட்ட சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் மாநில அளவிலான சேவைப்பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கொரோனா கால பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட ஷாகாக்கள் மிலன், மண்டலி போன்றவை தற்போது சுமார் 98 சதவீதத்திற்கும் அதிகமாக நடைபெறத் துவங்கியுள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இளைஞர்கள் அதிகம் சேர்ந்து வருகின்றனர் என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டது.