அங்கோர்வாட் கோயில் மூடல்

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், அந்த நாட்டில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே, வரும் 20ம் தேதி வரை,உலகப் புகழ்பெற்ற அங்கோவார்ட் கோயில் உட்பட அங்குள்ள அனைத்து பழமையான கோயில்கள், பள்ளிகள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வரவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.