பழமையான விஷ்ணு சிலை

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு சிலை, தற்போது லண்டனில் உள்ள பரகாத் கேலரியில் உள்ளது. ஏழு தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கும் ஒரு மனித உருவம் இதில் இடம் பெற்றுள்ளது. இது ஹிந்துக்கள் வழிபடும் பகவான் விஷ்ணுவின் மிகப் பழமையான சிலையாகவே தெரிகிறது. இந்த சிலை கி.மு 2,700க்கு முற்பட்டது. இது உலகின் மிகத்தொன்மையான ஹிந்து மதத்திற்கும் சிந்து சமவளி நாகரீகத்திற்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் ஆதாரங்களில் ஒன்று. ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியத்தை மதிப்பது முக்கியம். அவ்வகையில், தற்போதைய மத்திய அரசு, முன்பு பாரதத்தில் இருந்து திருடப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்கு விற்கப்பட்ட தொல்பொருட்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாரதத்தின் மிகப்பெரிய கலைப்பொருள் பொக்கிஷங்களை சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மத்திய அரசு மீட்டது குறிப்பிடத்தக்கது.