பி.எஸ்.எப் வீரர்களுடன் அமித்ஷா

எல்லை பாதுகாப்பு படையின் 57வது எழுச்சி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்போதுதான், வளர்ச்சி பெறும், முன்னேறும். நாட்டின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்கிறீர்கள். எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். டுரோங்களின் அச்சுறுத்தல்கள்களுக்கு எதிரான கருவிகளை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் பி.எஸ்.எப், டி.ஆர்.டி.ஓ மற்றும் என்.எஸ்.ஜி இணைந்து தயாரித்து வருகின்றன. உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமானப்படை தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உலக நாடுகளும் பாராட்டின. பி.எஸ்.எப்பில் காலி பணியிடங்களுக்காக 50 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. எல்லை பகுதி சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் 40 ஆயிரம் கோடி அதிகரித்து அனுமதிக்கப்பட்டு உள்ளது’ என தெரிவித்தார்.