மோடிக்கு அமெரிக்கா பாராட்டு

உலகலாவிய கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும் பாரதத்தில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் என பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜான் கெரி கூறினார். மேலும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்துவதற்கான ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தல், அதற்கு உகந்த சந்தைகளை ஏற்படுத்துதல், தேவையான முதலீடுகள் மூலம் சுமார் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் பாரதத்தின் இலக்கை எட்டுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.