நேபாளத்தில் அல்கொய்தா

‘எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு, அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு தன்னார்வ தொண்டுக் குழுவான I.H.H அமைப்பை கேடயமாக பயன்படுத்தி, பல நாடுகளில் பயங்கரவாதத்தை வளர்க்கிறது. அதேபோல, I.H.H, நேபாளத்தில், ‘இஸ்லாமிய சங் நேபாள்’ உடன் (ஐ.எஸ்.என்) இணைந்து பணியாற்றி வருகிறது. நேபாளத்தில் இவ்வமைப்பின் பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது I.H.H. நேபாளம் பாரதத்தின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் அதன் செயல்பாடுகளின் மையமாக உள்ளது. இதற்காக இவ்மைப்பு நேபாள தலை நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல மசூதிகள், மதரஸாக்கள்,அனாதை இல்லங்களை கட்டி நடத்துகிறது’ என ஸ்வீடிஷ் செய்தி ஊடகமான நோர்டிக் மானிட்டரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.