வேகமெடுக்கும் தாய் மதம் திரும்புதல்

கர்நாடகாவின் ஜன்னாபூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிறிஸ்தவர்கள், அதனை கைவிட்டு தங்கள் தாய் மதமான ஹிந்து மதத்துக்குத் திரும்பினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜன்னாபூரில் உள்ள ராம பஜன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இந்த தாய் மதம் திரும்பும் சடங்குகளை நிகழ்த்தினர். மீண்டும் மதம் மாறியவர்களில் ஜெயசீலன், அவரது மனைவி மகன்கள், மருமகள்கள் பேரப்பிள்ளைகள் அடங்குவர். ஜெயசீலனின் தந்தை ஏழுமலை 35 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். ஷிவமொக்காவைச் சேர்ந்த பஜ்ரங்தள் தலைவரும், அமைப்பாளர்களில் ஒருவருமான ராஜவன் வடிவேலு கூறுகையில், பல குடும்பங்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்ப விரும்புகின்றன. ஆனால் சமூகம் தங்களை ஏற்றுக்கொள்வது, கிறிஸ்தவ சமூகம் தங்களை என்ன செய்யும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. சுமார் 100 பேர் மீண்டும் மதம் மாற விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களும் விரைவில் இந்து மதத்திற்குத் திரும்புவார்கள் என தெரிவித்தார். முன்னதாக, இங்கு கடந்த நவம்பர் 28ல் கார்வார் ஹலியால் தாலுகாவில் ஐந்து கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் ஹிந்து மதத்திற்கு மாறினார்கள். உத்தர கன்னடா எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.