முதல்வருக்கு ஏ.பி.வி.பி கடிதம்

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் நிதி. திரிபாதி, தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ‘லாவண்யாவின் இரண்டாவது கொலை’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,மதமாற்றத்தால் தஞ்சை தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் மிஷனரி ஆசிரியர்கள், அதன் நிர்வாகிகளின் பங்கு தெளிவான ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. சகோதரி லாவண்யா மரணப் படுக்கையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். லாவண்யா கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று பாரதம் முழுவதும் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் உங்கள் அரசு குற்றவாளிகளுக்குத் துணை நிற்கிறது. சிறு குழந்தைகளை காவல் நிலையத்தில் உட்கார வைத்து, விரும்பிய வாக்குமூலத்தை கொடுக்குமாறு வற்புறுத்துவது உங்கள் அரசு விதியின் ஒரு அங்கமா, எதற்காக, யாருடைய உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை இந்த வேலையைச் செய்கிறது? லாவண்யாவின் குடும்பத்தை சித்திரவதை செய்வதன் மூலம் யாருடைய பலனை உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள்? லாவண்யாவின் தந்தை கடந்த 25 ஆண்டுகளாக உங்கள் கட்சியின் தீவிர உறுப்பினர். தொண்டரின் குடும்பத்திற்கே இந்த நிலையா? உங்கள் கட்சியில் இருந்து ஒருவர் கூட அவரின் வீட்டுக்கு செல்லவே இல்லை’ என சுட்டிக்காட்டியுள்ளார்.