ஆம் ஆத்மி அராஜகம்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது கட்சி ஆட்சியமைத்துள்ள பஞ்சாப் மாநில அரசும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. வதாகக் கூறி ஒரு வீடியோவை தஜிந்தர் பால் சிங் பக்கா  வெளியிட்டார். காஷ்மீர் பண்டிட்டுகளை அவமதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீரி பண்டிட்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை கெஜ்ரிவாலை தொடர்ந்து விமர்சிப்பேன் என்று பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தேசிய செயலாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, தஜிந்தர் பால் சிங் பக்கா ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளை பரப்பியதாகவும், மதம் மற்றும் வகுப்புவாத பகையை உருவாக்க முயன்றதாகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சன்னி சிங் காவல்துறையில் புகார் அளித்தார். உடனே, இவ்வழக்கை பதிந்த பஞ்சாப் காவல்துறை, சுமார் 50 காவலர்களுடன் பக்காவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்து இழுத்துச் சென்றது. இதை புகைப்படம் எடுக்க முயன்ற அவரது தந்தையையும் தாக்கி அலைபேசியை பறித்துச் சென்று அராஜகம் செய்துள்ளது. பேச்சு சுதந்திரத்தைப் பறிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் இச்செயலை பா.ஜ.க கடுமையாகக் கண்டித்துள்ளது.