தமிழகத்தில் ஒரு லவ் ஜிஹாத் முயற்சி

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் இளம்பெண், “எனது பெயர் செல்வி. நான் பிளஸ் டூ படித்திருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இம்ரான் என்ற முஸ்லிம் பையன் அறிமுகமானான். இருவருக்கும் நெருங்கிய பழக்கமெல்லாம் கிடையாது. பார்த்தால் ‘ஹாய்’ சொல்லிக் கொள்வோம், அவ்வளவுதான். திடீரென ஒருநாள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறினேன். ஆனால், எனது சம்மதம் இல்லாமலும், எனது பெற்றோரிடம் எதுவும் கேட்காமலும், இம்ரான் வீட்டில் எங்களது திருமண பத்திரிகையை அச்சடித்திருக்கிறார்கள். அதோடு, ‘செல்வி’ என்ற எனது பெயரை ‘அஸ்மா பாத்திமா’ என்றும் மாற்றி இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் எனக்கு துளியும் இஷ்டம் இல்லை. மேலும், செல்வி என்ற எனது பெயருக்குரிய அடையாளத்தை நான் இழக்க விரும்பவில்லை. ஆகவே, இந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஹிந்து பெண்ணின் சம்மதமும் அவரது குடும்பத்தினரின் சம்மதமும் இல்லாமல், தாங்களாகவே திருமண பத்திரிகையை அச்சடித்து கட்டாய திருமணத்தை நடத்த முயன்றிருக்கிறது ஒரு முஸ்லிம் குடும்பம். இதுவும் ஒருவகை லவ்ஜிகாத்தானோ…!