வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 01-07 ( நவம்பர் 17 – 23 ) 2019

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: உயர் அதிகாரிகளின் ஆதரவால் அகமகிழ்வீர்கள். பணிச்சுமை குறையும். உடனிருக்கும் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ராகுவினால் ஆரோக்கியம் பெறுவீர்கள். விலகிச் சென்ற சிலர் தாமாகவே நட்புணர்வு கொள்வார்கள்.

பெண்மணிகள்: பிறந்த வீட்டினரின் அரவணைப்பை பெறுவீர்கள். இல்லறத் துணையும் இணக்கமாக இருப்பார்கள். சகோதரர்களின் ஆதரவும் அதிகரிக்கும். குருவினால் சுபகாரியங்கள் நடைபெறும்.

மாணவ மணிகள்: நண்பர்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலையும் அமையலாம்.

சிறுதொழில், வியாபாரம்: பொது சேவையில் விருப்பம் ஏற்படும். புகழும் கிடைக்கும். வருமானமும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கட்சியினரின் ஆதரவும், தலைமையின் கருணையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலக நண்பர்களின் உதவியுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அலைச்சல் அதிரிக்கும் என்றாலும், பண வரவுக்கு தடை இருக்காது. ராகுவினால் செலவு அதிகரிக்கலாம் என்பதால் கவனமாக செயல்படவும். சூரியனால் வயிற்றில் உபாதை ஏற்படலாம்.

பெண்மணிகள்: தடைபட்டிருந்த சுப காரியங்கள் துரிதமாக நடைபெறும். குருவின் பார்வையினால் குடும்பத்தில் குதூகலம் நிலவும்.

மாணவ மணிகள்: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். புகழ் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய முதலீடுகள் வேண்டாம். வருமானம் தொடர்ந்து கிடைக்கும். ஊழியர்களை கண்காணிக்கவும்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் பலம் அதிகரிக்கும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அதேசமயம் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயலாற்றவும். எதில்காலம் குறித்த கவலைகளை தவிர்க்கவும். ராகுவினால் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

பெண்மணிகள்: புதிய வீடு, மனை வாங்கலாம். ஆரோக்கியம் குறித்த கவலை ஏற்பட்டு நீங்கும். சமூக அந்தஸ்து உயரும். குருவால் மேன்மை கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.

மாணவமணிகள்: உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அறிவுரையை கேட்டு பெறவும்.

சிறுதொழில், வியாபாரம்: சனி பகவானால் சங்கடம் ஏற்படும். குரு அருளால் நிவர்த்தி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள்: விரோதிகள் விலகுவார்கள். புதிய பதவி கிடைக்கும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: உயர் அதிகாரிகளின் ஆதரவின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். சக ஊழியர்களின் புறமுகமும் மனதை பாதிக்கும். அலுவலகத்தில் ஆதரவற்ற சூழ்நிலையில் சுக்கிரனால் ஆறுதல் கிடைக்கும். அதேசமயம் விரோதிகளை வென்று பெருமிதத்துடன் இருப்பீர்கள்.

பெண்மணிகள்: ஆன்மிக எண்ணமும், குடும்பத்தினரின் அரவணைப்பும் மகிழ்ச்சியைக் கூட்டும். சக தோழிகளில் சிலரின் நடவடிக்கையால் மனம் பாதிப்படையும். கேதுவினால் உயர் மதிப்புள்ள பொருட்களை வாங்குவீர்கள்.

மாணவ மணிகள்: நண்பர்களுடன் நட்பை பேண வேண்டும். ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களின் ஆதரவும் தொடரும்.

அரசியல்வாதிகள்: தகவல் பரிமாற்றத்தில் சற்று எச்சரிக்கை தேவை. போட்டியாளர்களால் இன்னல் நேரிடலாம்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: சிலருக்கு இடமாற்றம் நன்மை தரும். குரு பார்வையினால் பதவி உயர்வும், அதிகார அந்தஸ்தும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரோதமாக புறங்கூறும் ஊழியர்களின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். தனலாபம் உண்டு.

பெண்மணிகள்: குரு அருளால், நின்றுபோன சுபகாரியங்கள் நடைபெறும். இளம் பெண்களின் திருமனக் கனவுகள் நனவாகும். தாய்மை விரும்பியவர்க்கு தாய்மை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இணக்கம் ஏற்படும்.

மாணவ மணிகள்: சகோதரர்களால் வளர்ச்சிக்கு வழிகிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்கால கனவு நனவாகும்.

சிறுதொழில், வியாபாரம்: சிறப்பாக நடைபெறும் பங்குதாரர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்தவும்.

அரசியல்வாதிகள்: புகழ் கிடைக்கும். மதிப்பு உயரும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: அமைதியான மனநிலையுடன் பணியாற்ற வேண்டும். தேவையற்ற பேச்சினால் சிறிய சிறிய சண்டைகள் ஏற்படலாம். அதே சமயம் புத்திசாலித்தனம் ஓங்கும். பதவி உயர்வு கிடைக்கும். சூரியன் 3ல் அமர்ந்து கெளரவத்தை மீட்டுத்தருவார். பலர் நாடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.

பெண்மணிகள்: எதையும் சாதிக்கும் திறன் அமையும். ஆரோக்கியம் மேன்படும். சுக்கிரானால் சில பிறந்த வீடு செல்வார்கள். பொன்னாபரங்கள் அணிந்து விருந்துகளில் கலந்து கொள்வார்கள். அந்தஸ்து உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாணவ மணிகள்: வாக்கு ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், சூரியனும் சுக்கிரனும் நல்லாதரவைத் தருவார்கள். புகழ் கிடைக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: சலுகை கிடைக்காது என்ற போதிலும் கடன்கள் தீரும். பங்குதாரர்கள் தங்கள் பேச்சை கேட்பார்கள்.

அரசியல்வாதிகள்: செலவுகளை கண்காணிக்கவும். அனைவரையும் அனுசரிக்கவும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: வேலையின் சுமை குறையும். சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இப்போது நடைபெறும். உயர் அதிகாரிகளின் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு பணி உயர்வும், பணி நிரந்தரமும் கிடைக்கும். குழப்பமான மனநிலையுடன் இருப்பதை தவிர்த்து, உற்சாகமாக செயல்படுங்கள்.

பெண்மணிகள்: அஷ்ட லட்சுமியின் யோகம் கிடைக்கும். ஆரோக்கியம் மேன்படும். வசதியான வீடும் அமையும். காரியங்கள் அனைத்தும் சுலபமாக நடைபெறும். சிலருக்கு வாகன யோகமும் அமையும்.

மாணவ மணிகள்: ஆரோக்கியத்தில் நாட்டம் ஏற்படும். ஆசிரியரின் ஆதரவுடன் மதிப்பெண்கள் பெறுவீர்கள். உற்சாகம் பெருகும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலை விரிவுபடுத்துவதும்,  வளர்ச்சி நோக்கி செல்வதும் இப்போது நடைபெறும். வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்.

அரசியல்வாதிகள்: குழப்பங்களை தவிர்த்து, திடமான முடிவுகளை எடுங்கள்.

விருச்சகம்:

உத்தியோகஸ்தர்கள்: கடினமான வேலைகளுக்கு இடையில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் சுக்கிரன் சாதகமாக உள்ளார். பணிகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் பயன் உண்டு. ஏழரைச் சனியின் பிரச்சினை குறையும். பொறுப்புடன் செயல்பட்டு பெருமை அடைவீர்கள்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் அன்பை பூரணமாக உணர்வீர்கள். குறிப்பிட்ட விஷயத்தில் அதீத ஞானம் ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு திருமணம் அமையும். சொந்த பந்தங்களால் சந்தோஷம் நிலவும்.

மாணவ மணிகள்: விருப்பமான அனைத்தையும் கேட்டுப் பெறலாம். ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் நிதானம் அசவியம் தேவை.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளம் பெறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தனலாபம் பெருகும்.

அரசியல்வாதிகள்: ஆதரவு அதிகரிக்கும். கட்சியில் உயர்வு பெறுவீர்கள்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். குருவின் பார்வையினால் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பகையாளர்கள் விலகுவார்கள். பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உன்னதமான பதவி கிடைக்கும். ஏழரையின் கடினம் குறையும்.

பெண்மணிகள்: குடும்பத்திற்குள் ஒற்றுமை ஏற்படும். உங்களின் ஆலோசனையினால் பிரச்சினை தீரும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். இளம் பெண்கள் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பார்கள். வெற்றி நடை போடுங்கள்.

மாணவ மணிகள்: பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். எதிர்பாலினரின் அன்புக்கு கட்டுப்படுவீர்கள். எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள்: அனைவருக்கும் வேண்டியவராகவும், ஆதரிக்கப்படுவராகவும் விளங்குவீர்கள்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: முன்னேற்றமான காலம் நிகழ்வதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சூரியனும், சுக்கிரனும் தனவரவுக்கு காரணகர்த்தாவாக இருப்பார்கள். அரசு ஊழியர்க்கு தலைமை தாங்கும் அதிரஷ்டமும் அமையும். புதிய நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: சேமிப்பும், சுப செலவும் என சந்தோஷமாக விளங்குவீர்கள். கலைகளில் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக் கொள்வீர்கள். குருவின் ஐந்தாம் பார்வையால் சுபகாரியங்கள் நடைபெறும்.

மாணவ மணிகள்: குடும்பத்தினரிடத்திலும்  நண்பர்களிடத்திலும் நட்புணர்வுடன் இருக்கவும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும் பிரார்த்தனைைடிய நிறைவேற்றுவீர்கள். வெற்றிகள் தொடரும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் மேன்மை அடைவீர்கள். கணக்குகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். புதனால் இலாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அந்தஸ்தை உயர்த்திக்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உதவியாளர்கள் அமையப் பெற்று, பனிச்சுமை குறையும். விருப்பமான இடமும், ஊரும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியாக விளங்குவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

பெண்மணிகள்: பிறந்த வீட்டினரின் உதவியுடன் புகுந்த வீட்டின் பெருமைகளை காப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தனம், தான்யம் வீட்டில் நிறைந்து காணப்படும். உற்சாகமாக பணியாற்றுவீர்கள்.

மாணவ மணிகள்: புதன் ஒன்பதில் நிலவுவதால் கவனக்  குறைவு ஏற்படும். அதிக முயற்சியுடன் படித்தால் மட்டுமே உயர் மதிப்பெண்கள் பெற முடியும்.

சிறுதொழில், வியாபாரம்: சந்திராஷ்டம் தினங்களில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். தனலாபம் அதிகரிக்க ஆலோசனை தேவை.

அரசியல்வாதிகள்: புதிய பொறுப்புகள் பெறுவீர்கள். பெண்கள், விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: வளர்ச்சிக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குரு பார்வையால் தனஸ்தானம் புனித மடைவதால் வசதிகள் அதிகரிக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் இணக்கமாக மாறுவார்கள். சிலருக்கு பணியிட மாற்றமும் நடைபெறும். செயல்திறன் ஓங்கும்.

பெண்மணிகள்: செலவுகள் செய்வதை தள்ளிப்போடுங்கள். விருப்பமான பொருட்கள் பரிசாக கிடைக்கும். இல்லறத்துணையுடன் இணக்கமாக இருக்க வேண்டும். குறைகளை குற்றமாக  பார்க்காதீர்கள். இனிய பேச்சு மகிழ்ச்சி தரும்.

மாணவ மணிகள்: செவ்வாய் – புதன் இணைந்துள்ளதால் நன்மை – தீமையை உணர முடியும். விவாதங்களை தவிருங்கள். புத்தி சாதுர்யத்தால், வேலையும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: சொத்துகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பங்கு தாரர்களிடம் இணக்கமாகச் செல்ல வேண்டும்.

அரசியல்வாதிகள்: அதிக எதிர்பார்ப்பை தவிர்ப்பது நல்லது.