“திருமா”வுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்

வி.சி.க தலைவர் திருமாவளவன் ஹிந்து கோயில் பற்றி அவதூராகப் பேசியதற்கு ஹிந்துமுன்னணி பொறுப்பாளர் இளங்கோவன் கண்டனம்.

பட்டியலின மக்களுக்கு என்று கட்சி தொடங்கி மதமாற்றும் கும்பலுக்கும் தேசதுரோகிகளுக்கும் துணையாக செயல்படும் தொல்திருமாவளவன் ஹிந்து மத கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் விதமாக நடந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு கூம்பாக இருந்தால் மசூதி உயரமாக இருந்த தேவாலயம் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என்று பேசியுள்ளார். இதனை கண்டித்து தமிழகம் முழுக்க சுமார் 250 காவல்நிலையங்களில் ஹிந்து முன்னணி சார்பில் புகார் கொடுத்துள்ளோம். கடந்தாண்டு டிசம்பர் 6ம் தேதி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலையும் இடிக்கவேண்டும் என்று பேசியுள்ளார். இதனை கண்டித்தும் பல இடங்களில் மக்களிடையே பிரச்சாரம் செய்துள்ளது ஹிந்து முன்னணி.

கடந்த ஆகஸ்டு மாதம் 17 அவருடைய பிறந்தநாள் விழாவில் பத்திரிகையாளர் ரெங்கராஜ் பாண்டே கலந்துகொண்டுள்ளார். அவர் பேசுகையில் தாங்கள் இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானுக்கு மட்டும் நோன்பு இருந்து கஞ்சி குடிக்கும் நீங்கள் ஹிந்து பண்டிகையான சிவராத்திரி வைகுண்ட ஏகாதசிக்கும் நோன்பு இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஏற்புரையில் திருமாவளவன் என்னை கட்டியணைத்து சகோதரர்களாக இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஹிந்து மதத்தினர் அப்படி ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பேசினார்.

இதனை கருத்தில் கொண்டு ஹிந்து முன்னணியினர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் அதற்கு செவி சாய்க்கவே இல்லை. இதிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டது இவருடைய நோக்கம் சனாதன தர்மத்தை அழிப்பதும் மாற்று மதத்தை தூக்கிபிடிப்பதே தவிர பட்டியலின மக்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவது நோக்கம் இல்லை.

இவர் தமிழன் இல்லையென்றும் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்றும்  பட்டியலின மக்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிந்து பேசி வருகிறாரே தவிர மற்ற மதத்தின் பெயரை சொல்லவே தயங்குகிறார். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தேனியில் துலுக்கப்பட்டி என்ற பொம்முநாயக்கன்பட்டியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் இறந்த போது பிணத்தை மசூதி வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கும் என்று பட்டியலின மக்களுக்கும் கலவரம் நடந்தது. அன்றிரவே வி.சி.க.வை சேர்ந்த ஆளூர் ஷா.நவாஸ் அந்த இஸ்லாமியர்களை மசூதியில் சந்தித்து பேசி வந்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து திருமாவளவன் பட்டியலின மக்களை சந்தித்து இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் அவர்களோடு பகைமை வேண்டாம் சகோதரர்களாகவே இருப்போம் என்று பேசிவந்தார். அதற்கு அந்த மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தது நாமறிந்ததே. இதிலிருந்து அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து நான் பட்டியலின மக்களுக்கு ஒன்றும் தலைவரோ அல்லது வாழ்வுரிமையை மீட்கும் தீண்டாமை ஒழிப்புப் போராளியும் இல்லை. இஸ்லாமிய கைக்கூலி என்பதே