காஷ்மீரில் பள்ளிகள், அலுவலகங்கள் திறப்பு – வன்முறையை தடுக்க தீவிர பாதுகாப்பு

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று 196 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகர் மட்டுமின்றி ரஜோரி உட்பட காஷ்மீ்ர் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் இன்று முதல் முழுமையாக செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப் பதற்காக அங்கு 144 தடையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாக காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமைதி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை முதலாக, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளை மத்திய அரசு திரும்பப் பெற்று வந்தது.

இந்தநிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ஸ்ரீநகரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு மொத்தமுள்ள 900 பள்ளிகளில் 196 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரஜோரி உட்ப பிற பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுபோலவே அரசு அலுவலகங்கள் இன்று முதல் முழுமையாக செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று இரவு இண்டர்நெட் வசதி வழங்கப்பட்ட சில இடங்களில் வதந்திகள் பரப்பப்படுவது தெரிய வந்ததால் அந்த பகுதிகளில் மட்டும் மீண்டும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.