ராம ஜென்மபூமி வேலை விரைவு படுத்தப்பட்டுள்ளது

முகலாய வம்சாவளியை சேர்ந்த பகதூர் ஷாவின் வழித்தோன்றலில் வந்த கடைசி இளவரசர் அபிபுதின்  டுசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்க செங்கல் வழங்கினார்.  வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க தீர்ப்பளித்த பின்னர் விஎச்பி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா செய்தியாளர் சந்திப்பின் போது அயோத்தியில் கைவினைஞர்களின் பற்றாக்குறை காரணமாக  கற்களை செதுக்கும்  பணிகள்  நடைபெறவில்லை இருப்பினும்  ராஜஸ்தானிலிருந்து  கைவினைஞர்கள்  வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  ராமர் கோயிலில்  70 சதவீத பணிகள் முடிந்துள்ளதால்  தற்போது  விரைவில்  பணிகள்  முடிந்துவிடும் என்று  தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில்  தீர்ப்பு சாதகமாக வந்தால்  கோயில் கட்டுவதற்கு  முழு நிலத்தையும்  நன்கொடையாக  அளிப்பதாக  இளவரசர் அபீபுதீன் டுசி தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  நவம்பர் மாதம்  ஓய்வு பெற இருப்பதால்  அதற்குள்  அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று   விஸ்வ இந்து பரிஷித் தெரிவித்தது.