ஆபரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ் கருத்து

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசையும், ஆயுதப் படைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஹிந்து சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் நீதி வழங்குவதற்கான இந்த நடவடிக்கை மன உறுதியை அளிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கர வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமாகும்.

இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது. மிகவும் அவசியமானது. நெருக்கடியான இந்த நேரத்தில், முழு நாடும் மத்திய அரசிற்கும், ஆயுதப் படைகளுக்கும் ஆதரவாக இருக்கும். பாரத எல்லைப் பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சவாலான நேரத்தில், அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதில் தேச விரோத சக்திகளின் எந்த வொரு சதித்திட்டமும் வெற்றி பெறக்கூடாது. அனைத்து குடிமக்களும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும். ராணுவத்திற்கும், அரசிற்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பேணுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.