பாரதத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இந்த புள்ளிவிவரத்தின் துல்லியத்தன்மை தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், எல்லையோர மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் கணிசமான அளவு ஊடுருவி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் பெரும்பாலானோர் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் 30,84,826 பேர் பாரதத்தில் உள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது பாரதத்தில் ஏறத்தாழ 2 கோடி ஊடுருவல்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும் பாரதத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், விரும்பத்தகாத நிலைப்பாடு சார்ந்த புள்ளிவிவரங்கள் வெளிப்பட்டுள்ளன. இவை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. பாரதத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் விசா உடனடியாக முடித்து வைக்கப் பட்டுள்ளது. மருத்துவ விசாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமண ஜிகாத் என்பது எந்த அளவுக்கு உக்கிரமாக உள்ளது என்பதை கூர்மையாக நோக்க வேண்டும். பாகிஸ்தானியர்கள் பாரதப் பெண்களை மணந்துள்ளனர். அவர்கள் நெடுங்காலமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். பாரதப் பெண்ணை மணந்ததால் பலருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. சிலர் குடியுரிமை இல்லாமலும் ஆண்டுக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 83,000 முதல் ஒரு லட்சம் வரையிலான பாரதப் பெண்களை மணந்துள்ளனர். இவர்களில் பலர், உரிய முறையில் பாரத குடியுரிமை பெறாமலேயே உள்ளனர். குறிப்பாக பஞ்சாபிலும், காஷ்மீரிலும் இந்த எண்ணிக்கை மிக அதிகம். டெல்லியிலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு வந்தேறிகளின் ஆதிக்கம் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் இவர்கள் ஓரளவுக்கு ஊடுருவி உள்ளனர்.
இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் இடம்பெறாதவர்களை கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தவறான முறையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றவர்களையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 2013-−14 காலக்கட்டத்திலேயே இது தொடங்கி விட்டது. மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று 2021ல் மத்திய அரசு அறிவித்தது. இப்போது ஏற்பட்டுள்ள மோதலை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரையும் விரட்டியடிக்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி