மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி, ஊரை ஏமாற்றும் செயல் என்று குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இழைக் கும் அநீதி. மும்மொழி எதிர்ப்பு என பேசி ஓட்டுக்காக மக்களை ஏமாற்று கின்றனரே என என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு பள்ளி நிகழ்ச்சியில் இதை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது தெரிவித்துவிட்டேன்.
தமிழை முக்கிய மொழியாக வைத்துக்கொண்டு, மூன்றாவது மொழி ஒன்றை கற்பதால் ஏழை, எளிய மாணவர்களும் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.
எங்களைப் போன்ற அரசியல் வாதிகளின் குழந்தைகள் தனியார் பள்ளியில் 3 மொழிகள் கற்கின்ற னர். இரு மொழி மட்டும் போதும் என அரசியல்வாதிகள் பேசுவது ஊரை ஏமாற்றும் செயல். செய்வது ஒன்று பேசுவது ஒன்று என மாற்றிப் பேச என் மனசாட்சி இடம் கொடுக்க வில்லை.