நாமக்கல் அருகே, தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன் உள்ளிட்ட பத்து கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் பூஜை செய்வது தொடர்பாக, 2016ல் சமூகத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல கட்ட பேச்சு நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், வருவாய் துறையினர் கோவில்களை பூட்டி, ‘சீல்’ வைத்தனர். இந்நிலையில், மீண்டும் கடந்த 4ம் தேதி, வருவாய் துறையினர் பேச்சு துவக்கினர். அதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது அதையடுத்து, ஏழு ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவில்கள், நாமக்கல் தாசில்தார் சக்திவேல் முன்னிலையில், நேற்று சீல் அகற்றி, திறக்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.