பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்சல் அன்சாரிக்கு உத்தரப் பிரதேச நீதிமன்றம் ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். 2005 மற்றும் 1997ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ கிருஷ்ணநாத் ராய் மற்றும் வி.ஹெச்.பி பிரமுகரும் வர்த்தகருமான நந்த் கிஷோர் ருங்டா ஆகியோரின் கொலையில் தொடர்புடைய பிரபல தாதா சகோதரர்களான அப்சல் மற்றும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி சகோதரர்கள் மீது உ.பி அரசின் குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காஜிபூரின் மக்களவை உறுப்பினரான அப்சல் மற்றும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி ஆகியோருக்கு சமீபத்தில், முறையே 4 மற்றும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை எம்.பி, எம்.எல்.ஏ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.