தி.மு.க எம்.பியான ஆ. ராசா, சமீபத்தில் ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.பிக்கள் மூன்று பேர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஆ. ராசாவின் பேச்சு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். மேலும், சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு, எட்டு எம்.பி.,க்கள் தற்காலிக சபாநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ. ராசாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் ஹிந்துக்களையும், பெண்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள ராசா, மக்களவையை வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பான பத்திரிகை செய்திகள், வீடியோ உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து உள்ளனர்.