பாரதம் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதனை ஜம்மு காஷ்மீரில் தீவிரமாக செயல்படுத்துவதற்காக அங்குள்ள அரசு நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஆகஸ்ட் 15 அன்று மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அரசு நிர்வாகத்தின் உத்தரவைப் பற்றி தேசிய மாநாட்டுப் பேரவைத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த பரூக் அப்துல்லா, “நீங்கள் அதை உங்கள் வீட்டில் வைத்திருங்கள்” என்று கடுமையாக பேசினார். மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட பரூக் அப்துல்லாவுக்கு எதிராக தற்போது போராட்டங்கள் வலுத்து வருகின்றன.