கேரளாவில் உள்ள முஸ்லிம் அமைப்பான கேரள முஸ்லீம் ஜமா அத் கூட்டமைப்பு, அக்னிபாத் திட்டத்திற்கு முஸ்லிம் இளைஞர்கள் விண்ணப்பிக்க வலியுறுத்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த சுற்ற்றிக்கையில், அக்னிபாத் திட்டத்தை ‘அட்டிமாரி திட்டம்’ (சதித் திட்டம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதப் படைகளில் ‘எங்கள்’ (முஸ்லிம்) பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 5, தகுதியுள்ள அனைத்து முஸ்லிம் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து இமாம்களுக்கும் ஜும்மா உரை மூலம் செய்தியைப் பரப்ப வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சதித் திட்டம்’ என்ற வார்த்தைப் பயன்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஜமாஅத் கூட்டமைப்பு அதை அச்சுப்பிழை என்றுகூறி நியாயப்படுத்த முயன்றுள்ளது.