முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை முகநூலில் ஆதரித்து பதிவிட்டதற்காக கோயம்புத்தூர் சென்னனூர் பகுதியை சேர்ந்த ஏ.பி.வி.பி செயல்பாட்டாளர் கார்த்தி என்பவரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். கார்த்தி மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் கோவை காவல்துறை வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கார்த்தி வெளியிட்ட பதிவு அவரது முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கார்த்தியை கைது செய்யப்பட்டதையடுத்து பல்வேறு ஹிந்து அமைப்புகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.