பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’. இப்படம் சாம்ராட் பிருத்விராஜ் சௌஹான் என்ற புகழ்மிக்க பாரத மன்னரின் வாழ்க்கைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அக்ஷய் குமார், பாரத அரசர்களைப் பற்றி யாரும் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதவில்லை. நமது வரலாற்றுப் புத்தகங்களில் அவர்களைப் பற்றி அதிகம் எழுதப்பட வேண்டும். இது குறித்து கல்வி அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நம் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜ் சௌஹானைப் பற்றி ஒருசில வரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் பாரதத்தை ஆக்கிரமித்த முகலாய படையெடுப்பாளர்களைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. நமது கலாசாரம் மற்றும் நம் மகாராஜாக்கள் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. முகலாயர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதே சமயம் மிகச்சிறந்த நமது பாரதத்தை ஆண்ட நமது மன்னர்களைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.